கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பா.ஜ பண விநியோகம் செய்து வருகிறது

நாகர்கோவில், ஏப்.16: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜ பண விநியோகம் செய்து வருகிறது என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் மக்களவை தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி உறுதியாகிவிட்டது. அதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் உறவினரிடம் வருமான வரி சோதனை நடத்த பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் காரணமாக இருந்துள்ளார். இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும். இதனையே மோடியும், மத்திய அரசும் செய்து வருகிறது. சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை கொண்டு எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயல்களை செய்து வருகின்றனர். இதனால் இந்த அமைப்புகளின் தன்னாட்சி என்ற நிலை சீர்குலைந்துள்ளது.

குமரி மாவட்டத்திற்கு கடந்த 5 ஆண்டில் 2 ேமம்பாலங்கள் தவிர வேறு எந்த பணியையும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்யவில்லை. 4 வழிச்சாலை, புறவழிச்சாலை திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு தொடங்கிய பணிகள். ஆகவே புதிய திட்டங்கள் எதையும் அவர் கொண்டு வரவில்லை. சென்ட் தொழிற்சாலை, ரப்பர் தொழிற்சாலை தொடர்பாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார். கடந்த ஐந்தாண்டில் ஏன் கொண்டுவரவில்லை? இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஏன் வழங்கவில்லை. தோல்வி பயம் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை தாக்கி பேசி, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருகிறார்.

 இது அவரது தோல்வி பயத்தை உறுதியாக்கி உள்ளது. தோல்வி பயம் காரணமாக பாஜவினர் நேற்று இரவு முதல் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடைமுறையை கையாண்டுள்ளனர். இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. தேர்தல் ஆணையம் இனியுள்ள நாட்களிலேனும் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து இடையூறு செய்கின்றனர்.

நேற்று கூட்டணி கட்சியினர் புனித சவேரியார் கோயில் பகுதியில் காலையில் வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தபோது தேர்தல் அதிகாரிகள் அதனை கைப்பற்றினர். அதனை போன்று வெள்ளிச்சந்ைத பகுதியிலும் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் உறுதியாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி முழுவதும் மக்களின் உணர்வு மோடி அரசுக்கு எதிராக உள்ளது. இந்த எதிர்ப்பு அலை எங்களை வெற்றிபெற வைக்கும். வரும் 16, 17 தேதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருந்து இதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவுது உடனிருந்தார்.

படம்/ மணி 9102

Related Stories: