தலைவர்கள் குறித்து அவதூறு பேச்சு திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்

சிவகங்கை, ஏப். 12: சிவகங்கையில் நடைபெற்ற பிஜேபி பிரச்சார கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவருவருப்பான முறையில் பேசியதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் சிவகங்கை மக்களவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறியிருப்பதாவது: ஏப்.10 அன்று சிவகங்கை அரண்மனை வாசல் சண்முக ராஜா கலையரங்கம் முன்பு பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அதில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து சிவகங்கை அதிமுக நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் தேமுதிக பிரமுகர் மாரிமுத்து, பாஜகவைச் சேர்ந்த மோகன், குப்புச்சாமி ஆகியோர் பேசினர். முன்னாள் முதல்வர் கலைஞர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்திசிதம்பரம் ஆகியோர் குறித்து அருவருப்பான வகையில் பேசியுள்ளனர்.

எந்த ஒரு வேட்பாளரும் தனிப்பட்ட சொந்த விவகாரத்தை வைத்து பிரசாரம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை மீறி தலைவர்களை ஒருமையிலும், தகாத வார்த்தைகளாலும் மிகவும் கீழ்த்தரமாக அருவருக்கத்தக்க வகையில் பேசினர்.  இதனால் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியனர் ஆத்திரமடைந்து வன்முறை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களது பேச்சு இருந்தது. வன்முறையை தூண்ட வாய்ப்பளிக்காமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். எனவே இதுகுறித்து ஆய்வு செய்து தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: