கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

கோவில்பட்டி, ஏப்.12: கோவில்பட்டி எட்டயபுரம் மெயின்ரோட்டில் உள்ள கரிதா பப்ளிக் பள்ளியில் 2வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் காசிராஜன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் லில்லி வரவேற்றார். விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சிஓஇ முத்துராஜபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் நடனம், பரதநாட்டியம், நாடகம், சிறப்புரை, யோகா, சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கலைநிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி நடிகர் வையாபுரி பரிசு, சான்றிதழ் வழங்கினார்.  

   விழாவில் பள்ளி ஆசிரியர்கள் ரேணுகா, பரமேஸ்வரி, சீனிப்பரியா, ஷைனி, காளீஸ்வரி, நர்மதா, சங்கரி, பிரியா மற்றும் பெற்றோர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் காசிராஜன் செய்திருந்தார்.

Related Stories: