நரசிங்கம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

மதுரை, ஏப். 9: மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் முத்துமாரி அம்மன் கோயில் 33ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மார்ச் 29ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 31ம் தேதி கொடியேற்றம், ஏப்.5ல் திருவிளக்கு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கரகம் கோயிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முளைப்பாரி, மாவிளக்கு அம்மன் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று முளைப்பாரியை கங்கையில் விடுதல், கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை யானைமலை நரசிங்கம் நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

இனி 4 நாட்களுக்கு ஒருமுறை சப்ளை?

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதை மாநகராட்சி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டோம். இதே நிலை நீடித்தால் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி தான் முடிவு எடுக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் இறங்கியதால் போர்வெல் பொய்த்து, எல்லா பயன்பாட்டுக்கும் குடிநீரை பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால் தான் சிக்கலாகிறது. கோடை மழை பெய்து கை கொடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.

Related Stories: