ஜெயங்கொண்டம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி உட்பட 5 பேர் படுகாயம்

ஜெயங்கொண்டம், ஏப்.8: ஜெயங்கொண்டம் அருகே ஆம்புலன்ஸ்  விபத்துக்குள்ளானதில் நோயாளி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.தஞ்சை மாவட்டம் கண்டியூரை சேர்ந்தவர் செந்தில் குமார் (  33) என்பவர், தஞ்சை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செல்லஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்டார்.அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் அருகே ஆம்புலன்ஸ் சிதம்பரம் - ஜெயங்கொண்டம் சாலையில் சென்ற போது எதிரே வந்த வாகனத்தின் வெளிச்சத்தால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் உள்நோயாளியாக இருந்த செந்தில் குமார், அவரது மனைவி சுபா ( 23), இவரது உறவினர் பிரியங்கா( 25), ஆம்புலன்ஸ் டிரைவர் ராகவானந்தம் ( 39) மற்றும் ஆம்புலன்ஸ் அட்டண்டர் முத்துகுமார் ( 42) ஆகியோர் படுகாயமடைந் தனர்.உடனடியாக பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை மீட்டு மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: