ஊட்டி, ஏப். 7: நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக., வேட்பாளர் ராசா வெற்றிப் பெற வீதி வீதியாக சென்று ஊட்டி நகர திமுக.,வினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் நேற்று வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட பொருளாளர் நாசர்அலி, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்ேகாவன், முஸ்தபா, நகர துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமை கழக பேச்சாளர் ரம்ஜான்பேகம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, திமுக.,வின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.