குடிநீர் கேட்டு மாநகராட்சி லாரியை சிறைபிடித்து போராட்டம்

மதுரை, ஏப். 7: மதுரை அனுப்பானடி 54வது வார்டு பகுதி மற்றும் ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சியில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குடிநீர் இல்லாமல் அருகில் உள்ள தெருக்களில் காத்திருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய கட்டாய நிலை இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி தண்ணீர் லாரி குடிநீருடன் அப்பகுதியை கடந்து சென்றது. அப்போது அப்பகுதி மக்கள் காலை 9 மணியளவில் லாரியை வழிமறித்து சிறை பிடித்தனர். தகவலறிந்து வந்த தெப்பகுளம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் சுமூக முடிவுக்கு வந்தது. தொடர்ந்து மாநகராட்சியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்தனர். அதன் பின்னர் லாரியை விடுவித்து கலைந்து சென்றனர்.

Related Stories: