சோலைமலை கோயிலில் ஆன்மீக குழுவினர் தரிசனம்

மதுரை, ஜூன் 8: இந்து சமய அறநிலையத்துறையின் நிதி உதவி திட்டத்தின் கீழ் அறுபடை முருகன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மீக சுற்றுலா பயணம் அழைத்து செல்லப்படுகிறது. இதில் திருச்செந்தூரில் சாமி தரிசனம் முடித்த 250 பேர் கொண்ட ஒரு ஆன்மீக பயண குழுவினர் நேற்று மதியம் மதுரை அழகர்கோவில் மலைமேல் இயற்ைக அழகுடன் அமைந்துள்ள முருகனின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலுக்கு வருகை தந்தனர். அவர்களை அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் கள்ளழகர் கோயில் துணை ஆணையர் கலைவாணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. குழுவில் வந்த அனைவரும் சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சோலைமலை கோயிலில் ஆன்மீக குழுவினர் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: