கோஷ்டி மோதலில் வாலிபருக்கு வெட்டு 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 9ம் தேதி திறனறியும் தேர்வு

நெல்லை, ஏப். 5:  ஒருங்கிணைந்த இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளி் 7ம் வகுப்பு மாணவர்களின் பொது மற்றும் கல்வித்திறன் அறியும் தேர்வு சிறப்பு தேர்வு  நடத்தப்பட உள்ளது. வருகிற 9ம் தேதி இத்தேர்வு குறிப்பிட்ட பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நடக்க உள்ளது.  ஏப். 9ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணிவரை இத்தேர்வு நடத்தப்படும், இதில் பாடம் மற்றும் பொது அறிவு தொடர்பான 70 வினாக்கள் இடம்பெறும். சரியான விடைகளை ஓஎம்ஆர் ஷீட்டில், ஷேடு செய்யவேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் 21  வட்டாரங்களில் 686 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் 6 ஆயிரத்து 281 பேரும், தமிழ்வழி மாணவர்கள் 28 ஆயிரத்து 217 பேரும் இந்த தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலா அறிவுரையின்படி மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ் மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: