வெயிலின் தாக்கத்தால் ஆத்தூரில் தீப்பிடித்து எரியும் காய்ந்த மரங்கள்

ஆத்தூர், ஏப்.4: ஆத்தூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு வனத்தில் காய்ந்து போன மரங்கள் தானாக தீப்பிடித்து எரிவதால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் பகுதியில் கல்லுக்கட்டு மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.  வனப்பகுதியில் உள்ள மரங்கள் வறட்சி காரணமாக காய்துள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்ந்த மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்சலுக்கு அனுப்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் உள்ள காய்ந்த மரங்களை அகற்றி இதுபோன்று தீவிபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: