குருசுமலையில் கருத்தரங்கம்

அருமனை, ஏப். 4: குருசுமலையில் புனித சிலுவை வாழ்வின் நிறைவு என்ற பொருளில் நேற்று (புதன்) கருத்தரங்கம் நடந்தது. 62வது குருசுமலை திருப்பயணத்தின் 4வது நாளான நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மலையடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலி, நற்கருணை, ஜெப வழிபாடு ஆகியவை நடந்தது. மாலையில் புனித சிலுவை வாழ்வின் நிறைவு என்ற பொருளில் மலையடிவாரத்தில் நடந்த கருத்தரங்கிற்கு அருட்பணியாளர் ஜேம்ஸ்குலாஸ் தலைமை தாங்கினார். அபிநந்த் வரவேற்று பேசினார். பேராசிரியர்கள் கிரகோரி, நாராயணபிள்ளை, பிரம்மானந்தன், எம்.ஏ. சித்திக், அமிர்தா, அருட் சகோதரி ஷீபா, சுதாகரன் ஆகியோர் பேசினர். பின்ஸிலாலி நன்றி கூறினார்.5வது நாளான இன்று மலை உச்சியிலும், மலையடிவாரத்திலும் திருப்பலியும், மாலையில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், தமிழக, கேரள மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்கும் வாழ்த்தரங்கம், இரவு கலைமாமணி மாசிலாமணி தலைமையில் வீரமாமுனிவர் வேடம் புனைந்த ஞாபக விசாரணை மன்றம் நடக்கிறது.திருப்பயணத்தில் தினமும் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மலை உச்சியிலுள்ள திருச்சிலுவையை வழிபட்டு செல்கின்றனர். சில பக்தர்கள் பெரிய மரச்சிலுவையை தோளில் சுமந்து செல்வதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Related Stories: