அகரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கல்வி சீர் கிராம மக்கள் வழங்கினர்

ஜெயங்கொண்டம், ஏப்.3: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ரூ3 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் டேபிள், சேர், சுவர்க்கடிகாரம், மின்விசிறி, பீரோ, பெஞ்ச், மேசை, இரும்பு கதவு மற்றும் பழ வகைகள் தட்டுகளில் வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர். பின்னர் கல்வி சீர்வரிசைகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டு பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்துகொண்டனர்.

Related Stories: