தேவாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

ஜெயங்கொண்டம், ஏப்.30: ஜெயங்கொண்டம் அருகே தேவா மங்கலம்  மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் 28ம் தேதி காளி ஆட்டம் மற்றும் கழுமரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கோலாகலமாக நேற்று தொடங்கியது.

முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் அக்னி மற்றும் பூங்கரகத்துடன் வலம் வந்து, ஏற்கனவே தயார் நிலையில் இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர். பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.

The post தேவாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: