வாகன திருடர்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டாத போலீஸ்

ராமநாதபுரம், மார்ச் 27: நகர் பகுதியில் அதிகரித்து வரும் வாகன திருட்டுகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ராமநாதபுரம் நகர் பகுதிக்கு கல்வி, மருத்துவம், சுற்றுலா என்றும், வியாபாரம், தொழில் ரீதியாகவும் பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இன்றைக்கு பெரும்பாலான மக்கள் டூவீலரில் பயணம் செய்கின்றனர். டூவீலர் திருட்டு போகும் சம்பவங்களால் டூவீலர் பயன்படுத்துவோர் பெரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். நெரிசலால் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை கண்காணிக்கும் சிலர், டூவீலர்களை திருடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை டூவீலர்களை திருடி செல்பவர்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் டூவீலர்களை பறிகொடுத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திருடுபோன டுவீலர்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்களிடம் காவல்துறை மீது உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. பைக் மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: