குரும்பலூர் பாரதிதாசன் பல்கலை உறுப்பு கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், மார்ச் 26: குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் 18  வயது நிரம்பிய புதிய முதல் தலைமுறை வாக்காளர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டி தேர்தல் அலுவலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.  பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன் முன்னிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள், வாக்காளர்களாக உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் எனது வாக்கு விற்பனை அல்ல என்ற தகவல் பலகையில் கையெழுத்து இடும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் தேசிய தகவலியல் அலுவலர்கள் ரமேஷ், வெங்கடகிருஷ்ணன் ஆகியோரால் தேர்தல் தொடர்பான முறைகேடு குறித்து  தகவல்களை தெரிவிக்க வேண்டிய சி-விசில் ஆப் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியை பேராசிரியர் சந்திரமவுலி தொகுத்து பேசினார். தேர்தல் விழிப்புணர்வு குழு துணை தாசில்தார் பிரேமாராணி, குரும்பலூர் பிர்கா வருவாய் ஆய்வாளர் தங்கராஜ், குரும்பலூர் (தெ) கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: