அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் டிரைவர்களின் லைசென்ஸ் தற்காலிக ரத்து

அரியலூர், மார்ச் 22:  அரியலூர் மாவட்டத்தில் அதிகபாரம் ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கனரக வாகனம் இயக்கி வந்த டிரைவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் விபத்துகளை தவிர்க்கும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சாலைகளில் வேகத்தடை, ஒளிரும் வில்லைகள், சிமென்ட் ஆலைகளில் சுண்ணாம்புக்கல் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட எடை ஏற்றப்பட்டு அளவு உள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று வாகனங்களில் (டிராக்டர், ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள்) முன்புறம் மற்றும் பின்புறம் ஒளிரும் ஒட்டுவில்லைகள் அமைத்திருப்பதையும், வழக்கமான வாகன தணிக்கையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது, விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக லாரிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 டிரைவர்களின் டிரைவர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. லோடு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைகவசம் அணிய வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கைபேசி பயன்படுத்தக்கூடாது. இருசக்க வாகனங்களில் 2 பேருக்கு மேல் பயணிக்கக்கூடாது. பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிகட்டு, பின்புற ஏணி, மேல்புறங்களில் பயணம் செய்யும் பயணிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: