ஆவின் பால் பொருட்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

திருவள்ளூர், மார்ச் 21: திருவள்ளுர் அடுத்த காக்களுர் ஆவின் பால் பண்ணையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி , ஆவின் பால் பொருட்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் விற்பனைக்கு அனுப்பி வைத்தார். ஆவின் பால் சம்மந்தப்பட்ட பொருட்களான நெய், பால் பவுடர், பால்கோவா, மில்க்க்ஷேக் ஆகிய பொருட்களில், ‘’வாக்காளர் வாக்களிக்க வேண்டும். அது அவர்களது கடமை’’ என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘’வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 527 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

காக்களுர் ஆவின் பால் பண்னையில், தினந்தோறும் ஆவின் பால் பொருட்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனைக்கு செல்கிறது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது’’’’ என்றார். இந்நிகழ்ச்சியில், பால்வள துணைப்பதிவாளர் சந்திரசேகரன், அனைத்து பிரிவு மேலாளர்கள் வி.மதி, எஸ்.கவுதம், பி.வெங்கடேஷ்வரலு, கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Related Stories: