காஞ்சிபுரம், மார்ச் 21: காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் சிறுவேடல் ஜி.செல்வம் அறிமுக கூட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். மதுராந்தகம் நகர திமுக செயலாளர் குமார் வரவேற்கிறார். திமுக எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், ஆர்டி.அரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு திமுக வேட்பாளர் ஜி.செல்வத்தை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றுகின்றனர்.