நாமக்கல் மாவட்டத்தில் 1,001 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

நாமக்கல், மார்ச் 20: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிமம் பெற்று வைத்திருந்த 1001 துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சொந்த பாதுகாப்பிற்காக, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட தாலுக்காக்களில் 1,001 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.மேலும், வங்கி பாதுகாவலர்கள் மற்றும் ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் நிரப்பப்படும் காவலர்கள் ஆகியோர் துப்பாக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிளை தவிர்த்து இன்னும் சில துப்பாக்கிகள் வர வேண்டி உள்ளது. பெறப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: