ஊத்துக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்

ஊத்துக்கோட்டை, மார்ச் 20: ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில்  மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.ஊத்துக்கோட்டையில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் ஊத்துக்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நேற்று முன்தினம் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்ட  சட்ட பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.வட்ட சட்ட பணிகள் குழு உறுப்பினர்கள் வக்கீல்கள் குணசேகரன், பாலசுப்பிரமணிய குமார், மூத்த வக்கீல்கள் வெற்றி தமிழன், அருண்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் கன்னியப்பன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், தனியார் பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற மகளிரை போற்றி கவிதை,  பாடல் மற்றும் விழிப்புணர்வு மவுன நாடகம் ஆகியவை நடந்தது. விழாவில், நீதிபதி பாலகிருஷ்ணன் பேசியதாவது: பெண்கள் வீட்டிற்கு  மட்டுமல்ல நாட்டின் கண்கள் ஆவார்கள். அவர்கள் அன்பின் வடிவம், உலகின் உன்னத சக்தி ஆவார்கள். அவர்களை காப்பது நமது கடமையாகும் என்றார்.இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் ராஜசேகர், தினகரன், கோபி, தங்கபாண்டி உட்பட ஏராளமான மகளிர் குழு பெண்கள் கலந்துகொண்டனர். இறுதியில் வக்கீல் டில்லிபாபு நன்றி கூறினார்.

Related Stories: