பரமக்குடி, மார்ச் 19: பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமாருக்கு மாவட்ட திமுக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் ஆசிபெற்று நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.