கடையர் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

கீழக்கரை, மார்ச் 19: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த மார்ச் 11 முதல் 17ம் தேதி வரை புது மாயாகுளம், பாரதிநகர் கிராமங்களில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் அலாவுதீன் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ராஜேந்திரன், முகமது சதக் பொறியியல் கல்லூரி டீன் முகமது ஜகாபர், முதல்வர் அப்பாஸ் முகைதீன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன், கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் அப்பா சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா வரவேற்றார்.

சிறப்பு முகாமில் முதல் உதவி பயிற்சி, பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு பயிற்சி, பொது மருத்துவம், கண் மருத்துவ முகாம், உழவன் செயலி விளக்கம் ஆகிய முக்கிய நிகழ்வுகளும் மற்றும் களப்பணிகளான தூய்மைப்பணி, வாக்காளர் விழிப்புணர்வு, சீமைக்கருவேல மரம் ஒழிப்பு விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல், சுகாதார விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சி மற்றும் கடற்கரை தூய்மைப்பணி நடைபெற்றது, திட்ட அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Related Stories: