வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், மார்ச் 19:  பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து ராமநாதபுரத்தில் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பாக வக்கீல்  சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை  வகித்தார். துணைத் தலைவர் உஷா தேவி, பொருளாளர் கேசவன், செயலாளர் நம்புநாயகம்  முன்னிலை வகித்தனர். சங்கத்தின் துணை தலைவர் உஷாதேவி கூறுகையில், ‘பொள்ளாச்சியில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட உண்மையான  குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பெயரளவிற்கு நான்கு பேரை கைது செய்து வழக்கை முடிக்க பார்க்கின்றனர்.

7 வருடங்களாக பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் அரசியல்வாதிகளுக்கு  தொடர்புள்ளதாக தெரிகிறது. முறையான விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நீதிக்காக போராடும் மாணவிகளை காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர். உண்மையான  குற்றவாளிகள், ‘நான் அவனில்லை’ என  கலெக்டரை சந்தித்து நடவடிக்கை எடுக்க கூடாது என மனு அளிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஆயிரக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் பொள்ளாச்சி எஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றார். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: