தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை தொட்டு, ஆடைகளை சோதனை செய்யக் கூடாது பறக்கும்படை, கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவு

வேலூர், மார்ச் 8: தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை தொட்டு, ஆடைகளை சோதனை செய்யக்கூடாது என்று பறக்கும்படை, கண்காணிப்பு குழுவுக்கு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளை சேர்ந்த 8.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர். அதேபோல் பிளஸ் 1 தேர்வும் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதற்காக மாநிலத்தில் 2,950 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்து வருகிறது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல் மாவட்டம் வாரியாக இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் என்று 23 உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்நிலை பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை தொட்டு, ஆடைகளை சோதனை செய்யக்கூடாது. இதனால் மாணவிகள் மனரீதியாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், காப்பியடிப்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை கடந்த 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: