பெரியார் பல்கலை.யில் சமூகவியல் தேசிய கருத்தரங்கு

ஓமலூர், மார்ச் 6: சேலம் பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை, பத்தாண்டு நிறைவையொட்டி, “சமூகவியலின் இன்றைய போக்கு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் குழந்தைவேல், தலைமை வகித்து பேசியதாவது:அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. எனினும் அறிவியல் கண்டு பிடிப்புகள் சில சமயம் இயற்கையின் மீது சமநிலையற்றத் தன்மையை உருவாக்கி விடுகின்றன. அதேபோல், சமூகத்திலும் சமநிலையற்ற நிலை உருவாகி விடுகிறது. அணுசக்தி மின்சாரம் தேவையாக உள்ளது. அதுகுறித்த சமூக புரிதலை மக்களிடையே சமூகவியலாளர்களால் தான் உருவாக்க இயலும். டிரான்சிஸ்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் கண்டுபிடிப்பால் மக்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சமூகவியில் துறையில் அரிய சாதனைகளை நிகழ்த்திய பேராசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. காந்தி கிராம பல்கலைக் கழகப் பேராசிரியர் துவாரகி, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் கண்ணன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மதுரா கல்லூரி பேராசிரியர்கள் சொக்கலிங்கம், சாம்பசிவம், ஜெயதுரை, மதர் தெரிசா பல்கலைக்கழக பேராசிரியர் ரதிதேவி உள்ளிட்டோருக்கு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் விருது வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஜெயசீலன், சேது, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூகவியல் துறைத்தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார், கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: