தாசில்தார்கள், பிடிஓக்கள் கூண்டோடு மாவட்ட மாறுதல் எதிரொலி வட்டார வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

விருதுநகர், மார்ச் 6: தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் 270 தாசில்தார்கள், 934 பிடிஓக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசு நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்ட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த இரு தினங்களாக வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 10 தாசில்தார் அலுவலகங்கள், 11 பிடிஓ அலுவலகங்கள், 3 கோட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களில் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி பிரிவில் 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மாவட்ட துணைத்தலைவர் ராஜகோபால் தலைமையில் தரையில் அமர்ந்து இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையில் 400க்கும் மேற்பட்ட அலுவலர்களும், ஊரக வளர்ச்சித்துறையில் 820க்கும் மேற்பட்ட அலுவலர்களும் பங்கேற்றனர்.

உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தால் தேர்தல் நடத்தை விதிகளின்படி முன்கூட்டி செய்ய வேண்டிய பணிகள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஊதியம், வறுமைக்கோடு பட்டியல் மனுக்கள் பதிவு, இ.டெண்டர்களை திறக்காததால் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.

Related Stories: