திருச்சுழியில் 54 மிமீ மழை பதிவு

 

விருதுநகர், மே 22: விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்சுழியில் 54 மிமீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு மி.மீட்டரில் வருமாறு: திருச்சுழி 54, காரியாபட்டி 43.80, ஸ்ரீவில்லிபுத்தூர் 1, விருதுநகர் 30.20, கோவிலாங்குளம் 2.80, அருப்புக்கோட்டை 15, மாவட்ட சராசரியாக 12.23 மி.மீ மழை பதிவாகி உள்ளது.அணைகளில் நீர் இருப்பு நிலவரம்:

பெரியார் அணையின் 47 அடி கொள்ளளவில் 24 அடி, கோவிலாறு அணையின் 42 அடி கொள்ளளவில் 29 அடி, வெம்பக்கோட்டை அணையின் 22 அடி கொள்ளளவில் 17 அடி, கோல்வார்பட்டி அணையின் 17 அடி கொள்ளளவில் 9 அடி, ஆணைக்குட்டம்  அணையின் 24 அடி கொள்ளளவில் 9 அடி, குல்லூர் சந்தை அணையின் 6 அடி கொள்ளளவில் 6 அடி, இருக்கன்குடி அணையின் 22 அடி கொள்ளளவில் 15 அடி, சாஸ்தா கோவில் அணையின் 32 அடி கொள்ளளவில் 25 அடி நீர் உள்ளது.

The post திருச்சுழியில் 54 மிமீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: