ராமநாதபுரம், மார்ச் 1: எம்பி தேர்தலுக்கு முன்பு பயிர்காப்பீடு தொகை வழங்கா விட்டால், தேர்தலை புறக்கணிக்க போவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் வீரராகவராவ் பேசுகையில், 2017-18க்கான பயிர்காப்பீடு இன்சூரன்ஸ் தொகை வராமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். பணம் தாமதத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனமே பொறுப்பு. குறைவாக கொடுப்பதை விவசாயிகள் ஏற்கமாட்டார்கள் என தெரிவித்து விட்டோம் என்றார். திருவாடானை மங்களகுடி விவசாயி ராஜேஷ் பேசுகையில், மங்கள்குடி கிராமத்தை தனிபிர்க்காவாக பிரித்ததால் 2016-17க்கான இன்சூரன்ஸ் தொகை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வந்துள்ளது. யார் உத்தரவின் பேரில் தனிபிர்க்காவாக பிரித்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
