திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, இன்று திமுக நகர, ஒன்றிய கழகத்தினர் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஸ்டாலின் பிறந்தநாள் இளைஞர்களின் எழுச்சி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், கடலூர் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் திமுக தொண்டர்கள் விருவிருப்பு அடைந்துள்ளனர். கடலூர் நகர திமுக சார்பில் 45 வார்டுகளிலும் கட்சி கொடியேற்றம், அனைத்து வார்டுகளிலும் உணவு வழங்குதல் என நாட்கள் 5 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நகர செயலாளர் ராஜா ஏற்பாடு செய்துள்ளார். மாநில தேர்தல் பணிக்குழு முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி மற்றும் கட்சியின் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இன்று 22வது முதல் 32வது வார்டு கடலூர் நகர பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.