நடன போட்டியில் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வியியல் கல்லூரி சாதனை

நாகை, பிப்.28: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் பெரிய அளவிலான நடனபோட்டி நடைபெற்றது.  இந்த நடன நிகழ்ச்சியில் 75க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 500 மாண, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இப் போட்டியில் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். கல்வியியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரியின்  தலைவர் ஜோதிமணி அம்மாள் மற்றும் செயலர் பரமேஸ்வரன்,  கல்லூரி முதல்வர் குமார், இயக்குநர் விஜயசுந்தரம் மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.   

Related Stories: