பள்ளி ஆண்டு விழா

பரமக்குடி, பிப்.26: பரமக்குடி லயன்ஸ் பள்ளியில் 28வது ஆண்டுவிழா நடைபெற்றது. பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 28வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரிமா சங்க தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் சோபனாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். டி.எஸ்.பி. சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கடந்தாண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தாளாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் மனோகரன், அரிமா சங்க தலைவர் பேரா.பழனிச்சாமி, பொருளாளர் சுப்பையா ஆகியோர் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு லயன்ஸ் ஆலோசனை கமிட்டி ஆடிட்டர் மலையப்பன், வழக்கறிஞர் தினகரன், ஆசிரியர் குருசண்முகம், போரா,மணிமாறன் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர். முடிவில் பள்ளி துணை முதல்வர் தனவெட்சுமி நன்றி கூறினார்.

Related Stories: