டிஎன்டி மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

திண்டுக்கல், பிப். 22: திண்டுக்கல்லில் சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பில் டிஎன்டி சமூக நீதி மாநாடு நடந்தது. இதில் தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகளை சேர்ந்த ஜெபமணி, முனிசாமி, ராஜவர்மன், சரவணன், பரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மாநாட்டில், தமிழகத்தில் டிஎன்டி மக்களை எம்பிசி பிரிவிலிருந்து பிரித்து 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். டிஎன்டி மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. ஏற்பாடுகளை தலைமை நிலைய அமைப்பு பொதுச்செயலாளர் துரைமணி செய்திருந்தார்.

Related Stories: