வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேக்கம்

கமுதி, பிப். 21: கமுதி முத்துமாரியம்மன் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் அடிப்படை வசதியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் வாறுகால் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி காணப்படுகிறது. இதனால் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. சாலை வசதியும் இப்பகுதியில் இல்லாததால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. தெருவிளக்கு வசதி மிகவும் குறைவாக உள்ளது.

பொதுக் கழிப்பறை இப்பகுதியில் இல்லாமல் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். போதிய வசதிகள் இல்லாததை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு இப்பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதி தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: