வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பில் குளறுபடி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

தொண்டி, பிப். 21: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பில் பல குளறுபடிகள் உள்ளதால் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தமிழக அரசு 110 விதியின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து ஊராட்சியிலும் யூனியன் அலுவலர்களால் இப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. ரூ.2 ஆயிரம் பெறும் பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் என்பது எப்போது எடுத்தது. யாரால் எடுக்கப்பட்டது. இதில் உண்மையில் வறுமையானவர்கள் மட்டுமே உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய ஊராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட கணக்கின்படி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருமே அதில் அதிகம் இடம்பெற்றனர். உண்மையான ஏழை விவசாயி, மீனவர்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் தங்கள் பெயர் விடுபட்டுள்ளதை அறிந்து வேதனையில் உள்ளனர்.

புதிதாக பெயர் சேர்க்க படிவம் வாங்கியும் எவ்வித பயனும் இல்லை. அதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் முறையாக எடுத்து அதன்பிறகு பணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த முறை பொங்கல் பண்டிகைக்கு வழங்கியதுபோல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா கூறுகையில், ‘வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எடுத்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. இதிலும் வசதியானவர்களே அதிகம் உள்ளனர். தற்போது அரசு அறிவித்துள்ள நிதியை பெற உண்மையான ஏழை மக்கள் பெயர்கள் இல்லை. இதிலும் வசதி படைத்தவர்களே அதிக பயனடைய வாய்ப்பு உள்ளது. அதனால் மீண்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கும் வரையிலும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.

* விளம்பி வருடம் மாசி மாதம் 9ம் நாள், வியாழக்கிழமை, தேய்பிறை.

* திதி: துவிதியை மாலை 5.04 மணி வரை; அதன் பிறகு திருதியை.     

* நட்சத்திரம்: பூரம் காலை 7.21 மணி வரை; பிறகு உத்திரம் மறுநாள் பின்னிரவு 4.50 மணி வரை; அதன் பிறகு அஸ்தம்.

* யோகம்: சித்தயோகம் காலை 7.21 மணி வரை; பிறகு மரணயோகம் மறுநாள் பின்னிரவு 4.50 மணி வரை; அதன் பிறகு சித்தயோகம்.

* நல்லநேரம்:காலை மணி 9-12, மாலை 4-7,  இரவு 8-9 மணி வரை.

* ராகுகாலம்: மதியம் 1.30 முதல் 3.00 மணி வரை.

* எமகண்டம்: காலை 6.00 முதல் 7.30 மணி வரை.

மக்களை அலைக்கழிக்கும் விஏஓக்கள் பரமக்குடி தாலுகா கிராமங்களில் பணியாற்றும் விஏஓ.,கள் மாநில, மத்திய அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம், ரூ.6 ஆயிரம் பெறுவதற்காக விண்ணப்பம் செய்ய வரும் மக்களை அலைக்கழிப்பதாகவும், பணம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.“ வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் மாநில அரசு அறிவஇத்துள்ளது. இேதபோல் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர்கள் வறுமை கோட்டிற்கு கிழ் உள்ளவர்கள் மற்றும் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்களை கணக்கிட்டு அதற்கான விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்ய வேண்டும்.

 பதிவு செய்யும் விபரத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

தற்போது விஏஓக்களிடம் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க வரும் பொதுமக்களை விஏஓக்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தந்த குரூப்களில் இல்லாமல் பரமக்குடியில் வாடகைக்கு ரூம் போட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர். விண்ணப்பம் செய்யும்போது ஆவணங்கள் சரி இல்லை என கூறுவதால் பொதுமக்கள் வேலைகளை விட்டுவிட்டு இரண்டு மூன்று நாட்கள் அலைய வேண்டியுள்ளது. பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. இல்லையென்றால் அலையவிடுகின்றனர் என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விஏஓக்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: