10 பேர் கைது, 40 பேருக்கு வலை: கடைகள் அடைப்பால் பதட்டம் போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாஸ், மாஸ்க்

திண்டுக்கல், பிப். 21: கோடைகாலம் துவங்கும் முன்பே திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரி செல்சியஸ் தொடுகிற வரை வெயில் கடுமையாக உள்ளது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் போக்குவரத்து போலீசார் அவதிப்படுகின்றனர். இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகளும் நகரின் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் வெயிலை சமாளித்து பணியாற்ற போக்குவரத்து போலீசார் 30 பேருக்கு கூலிங் கிளாஸ், 50 பேருக்கு தொப்பிகளை எஸ்பி சக்திவேல் வழங்கினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘வெப்பத்தால் கண் எரிச்சலை தடுப்பதற்காக கூலிங்கிளாசும், வெப்பத்தை தாங்குவதற்கும், காற்றுபோகும் அளவிற்கும் தொப்பிகளும் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர். இதேபோல் வாகன புகை, தூசி, மண், ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஒட்டன்சத்திரத்தில் போக்குவரத்து போலீசாருக்கு முகவுறை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் நண்பர் குழு முகமதுநாசர் இவற்றை வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர் சேரலாதன், எஸ்எஸ்ஐ சுப்பிரமணி, ஏட்டு ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: