கடும் வறட்சி எதிரொலி வன விலங்குகளின் தொல்லை அதிகரிப்பு

ஊட்டி, பிப். 20: கடும் வறட்சி எதிரொலியாக நீலகிரியில் வன விலங்குகளின் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் உறைபனி மற்றும் மழையில்லாததால் மாவட்டத்தில் உள்ள வனங்கள் வறட்சியில் பிடியில் சிக்கியுள்ளன. இதனால், வனங்களில் உள்ள குளங்கள், குட்டைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் விலங்குகளுக்கு போதுமான உணவு கிடைக்காததால் அவை தண்ணீர் மற்றும் உணவை தேடி மக்கள் வசிக்கும் பகுதிகள், குறிப்பாக, விவசாய நிலங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது.  இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு  வரும் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கும் புகுந்து காய்கறி பயிர்களை  சேத படுத்துகிறது. அதுமட்டுமின்றி சில சமயங்களில் தொழிலாளர்களையும் தாக்கி விடுகிறது. இம்முறை பனி பொழிவு காரணமாக கடந்த இரண்டு மாதமாக பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்து வந்த நிலையில் தற்போது வன விலங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, வனத்துறையினர் வன விலங்குகளை விவசாய நிலங்களுக்குள் வர விடாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: