கும்பகோணத்தில் இருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம், பிப். 20: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக 275 புதிய பேருந்துகளை கடந்த 14ம் தேதி தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் குடந்தை மண்டலம் சார்பில் திருச்சி, சேலம், மதுரை, நாகர்கோவில், வேளாங்கண்ணி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் 10 புதிய பேருந்துகளை வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து வைத்தார்.

கலெக்டர் அண்ணாதுரை, மயிலாடுதுறை எம்பி பாரதிமோகன், அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ரவீந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், பொது மேலாளர் அனுஷம், நகர செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் அறிவழகன் பங்கேற்றனர்.
Advertising
Advertising

Related Stories: