பிளஸ்2 தேர்வை 38,541 மாணவர்கள் எழுதுகின்றனர்

மதுரை, பிப்.20: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, மேலூர், மதுரை, திருமங்கலம் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 42 பள்ளிகளில் இருந்து 2 ஆயிரத்து 504 மாணவர்கள், 2 ஆயிரத்து 329 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 833 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதேபோல் மேலூர் கல்வி மாவட்டத்தில் 110 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 581 மாணவர்கள், 6 ஆயிரத்து 455 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 36 பேர் தேர்வு எழுதுகின்றனர். மதுரை கல்வி மாவட்டத்தில் 80 பள்ளிகளில;் இருந்து 5 ஆயிரத்து 868 மாணவர்கள், 6 ஆயிரத்து 798 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 666 பேர் தேர்வு எழுதுகின்றனர். திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 77 பள்ளிகளில் இருந்து 4 ஆயிரத்து 508 மாணவர்கள், 4 ஆயிரத்து 498 மாணவிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 6 பேர் தேர்வு எழுதுகின்றனர். நான்கு கல்வி மாவட்டங்களிலும் சேர்த்து 38 ஆயிரத்து 541 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

Related Stories: