பழநியாண்டவர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

பழநி, பிப். 20: சின்னக்கலையம்புத்தூர் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் ஆங்கில முதுகலை ஆஉயராய்வுத்துறையில் ங்கில இலக்கியங்களில் மொழி, கலாச்சார இணைவு குறித்த ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடந்தது. முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் செல்வி சந்தானகிருஷ்ணன் கருத்தரங்க நோக்கம் குறித்து பேசினார். இலங்கை ஜப்னா பல்கலைக்கழக பேராசிரியர் கந்தையா கணேசன் ஆங்கில மொழி வளர்ப்பில் நாடகத்தின் பங்கு எனும் தலைப்பில் பேசினார். கோவில்பட்டி கேஆர்.கலை அறிவியல் கல்லூரி ஆங்கில பேராசிரியர் பாலகிருஷ்ணன் இலக்கியத்தின் வழியில் கலச்சாரத்தை எடுத்து கூறுதல் எனும் தலைப்பில் பேசினார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கில கவிதைகளை நாடகமாக்கி நடித்து காண்பித்தனர். ஆங்கிலத்துறை மாணவிகளின் ஜூலியஸ்- சீசர் நாடக நிகழ்ச்சி நடந்தது. கருத்தரங்கில் 110 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது. இதில் காமராசர், அன்னை தெரசா மகளிர், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வனிதா, பிரியா, சந்திரா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: