தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோயிலில் 7 ஐம்பொன் சிலைகள் மாயம்: 47 ஆண்டுக்கு பின் வழக்குப்பதிவு

கும்பகோணம், பிப். 15: தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோயிலில் 7 ஐம்பொன் சிலைகள் மாயமானது தொடர்பாக 47 ஆண்டுகளுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தண்டந்தோட்டத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான நடனபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.60 கோடி மதிப்பிலான ஒரு அடி கிருஷ்ண காளிங்கநர்த்தனம், ஒன்றரை அடி கிருஷ்ண காளிங்க நர்த்தனம், இரண்டரையடி அகஸ்தியர், அரையடி உயரம் கொண்ட அய்யனார், அம்மன் ஐம்பொன் சிலைகள் 1971ம் ஆண்டு மே 12ம் தேதி மாயமானது. அதேபோல் 1972ம் ஆண்டு ரூ.50 கோடி மதிப்பிலான நடனபுரீஸ்வரர் நடராஜர் மற்றும் கொலு அம்மன் ஐம்பொன் சிலைகள் மாயமானது.

காணாமல் போன நடராஜர் சிலை, தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது. இக்கோயிலில் காணாமல் போன 7 சிலைகளை தவிர மீதமுள்ள 17 சிலைகள் உப்பிலியப்பன் கோயிலில் 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தற்போது உப்பிலியப்பன் கோயிலில் பாதுகாப்பாக உள்ள 17 சிலைகள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சமீபத்தில் வாசு புகார் அளித்தார். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்மாணிக்கவேல் நேற்று நடனபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது கோயில் அர்ச்சகர்களிடம் காணாமல்போன சிலைகள், பாதுகாப்பில் உள்ள சிலைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து கோயிலில் காணாமல் போன சிலைகள் தொடர்பாக 47 ஆண்டுகளுக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற பொன்மாணிக்கவேல் நேற்று 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: