ஏராகரம் கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் பற்றாக்குறையால் 20,000 நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் கவலை விவசாயிகள் கவலை

கும்பகோணம், பிப். 15: ஏராகரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் பற்றாக்குறையால் 20 ஆயிரம் ஏக்கர் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தஞ்ைச மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஏராகரம், உத்திரை, ஆலமன்குறிச்சி, முத்தையாபுரம், தட்டுமால், மூப்பக்கோயில், கொட்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 5,000 ஏக்கரில் சம்பா சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். தற்போது நெல்மணிகள் முற்றியுள்ள நிலையில் 50 சதவீத அறுவடை பணி முடிந்துள்ளது. இக்கிராமங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை டிராக்டர், டிப்பர் லாரி மூலம் ஏராகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து தான் விற்பனை செய்வர். இந்நிலையில் விற்பனை செய்வதற்காக ஏராளமான விவசாயிகள், கொள்முதல் நிடிலையத்துக்கு நெல் கொண்டு வநதனர். ஆனால் கடந்த 2 நாட்களாக ஏராகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் பற்றாக்குறையாக உள்ளதால் கொள்முதல் செய்யவில்லை. இதனால் கொள்முதல் நிலைய வளாகத்தில் 20 ஆயிரம் மூட்டை நெல்கள் கொட்டி தார்ப்பாயால் மூடி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
Advertising
Advertising

இதுதொடர்பாக கொள்முதல் நிலையத்தில் உள்ள அலுவலரிடம் கேட்டால் சாக்குகள் தீர்ந்து விட்டது, சாக்குகள் வந்ததும் தருகிறோம் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்குகளை வழங்கி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏராகரம் விவசாயி சாமிநாதன் கூறுகையில், சம்பா சாகுபடி அறுவடை செய்து நெல் மூட்டைகளை ஏராகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைத்துள்ளோம். ஆனால் கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் இல்லை, வந்ததும் தருகிறோம் என்று கூறுகின்றனர். போதுமான சாக்குகள் வழங்காததால் கொள்முதல் நிலையத்தில் 20,000 மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. தற்போது இரவு நேரத்தில் பனி பெய்து வருவதால் நெற்பயிர்கள் அனைத்தும் பதராகி நாசமாகும். இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏராகரம் நேரடி கொள்முதல் நிலையத்துக்கு சாக்குகளை வழங்கி நெல் கொள்முதல் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: