காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 6 பேர் கைது

தஞ்சை, பிப். 15: தஞ்சையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காதல் ஜோடிகளுக்கு தாலிக்கயிறு வழங்க இந்து மக்கள் கட்சியினர் நேற்று தஞ்சை பெரிய கோயிலுக்குள் வந்தனர். இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் சுகுமார், செயலாளர் செல்வசரவணன், நகர செயலாளர் சதீஷ், துணைத்தலைவர் சிவனேசன் ஆகிய 6 பேர் தாலிக்கயிறுகளுடன் பெரிய கோயிலுக்குள் வந்தனர். அப்போது பெரிய கோயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertising
Advertising

Related Stories: