திமுக சார்பில் நூலகத்திற்கு புத்தகம்

மொடக்குறிச்சி, பிப். 15:  மொடக்குறிச்சி அடுத்த பொன்னம்பாளைத்தில் திமுக., சார்பில் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மொடக்குறிச்சி ஒன்றியம் பள்ளி பகுதியில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி கலந்துகொண்டு மக்களிடம் புகார் மனு பெற்றார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூலகத்தில் புத்தகங்கள் இல்லை. புத்தகம் வாங்கித் தரவேண்டும்  என கோரிக்கை விடுத்தனர் .இதையடுத்து, திமுக சார்பில் பொன்னம் பாளையத்தில் உள்ள நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் விழா மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் நடந்தது.
Advertising
Advertising

இதில், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி  நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்.பி., கந்தசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர், அவல்பூந்துறை பேரூர் செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: