காந்திமார்க்கெட் பகுதியில் 608 மின் இணைப்புகள் ஆய்வு

திருச்சி, பிப்.15: திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் மின்வாரிய செயற்பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் கூட்டாக நடத்திய ஆய்வில் 608 மின் இணைப்புகளில்  பழுதான ஏராளமான மின் மீட்டர்கள் கண்டறியப்பட்டு அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.திருச்சி தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் திருச்சி நகரிய கோட்டம் காந்திமார்க்கெட் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட பல்வேறு பகிர்மானங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 608 மின் இணைப்புகளில் ஆய்வு செய்ததில் பல மின் இணைப்புகளில் மீட்டர் பழுது உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வருங்காலங்களில் இதுபோன்ற திடீர் மின் ஆய்வுகள் தொடர்ந்து இக்கோட்டத்தில் நடக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மின் நுகர்வோர்கள் மின் விதிமுறை மீறல்கள் இல்லாமலும், மின்சாரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். மின்நுகர்வோர்கள் மின் இணைப்புகளில் ஏற்படும் புகார்களை 1912 மற்றும் 18004252912 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: