மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் கணவன் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை திருச்சியில் பரபரப்பு

திருச்சி, பிப்.15: திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் மனைவிக்கு தெரியாமல் கணவன் 2வது திருமணம் செய்ததை கண்டித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த புகார் மீது நடவடிக்கை போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கன்டோன்மென்ட் காவல்நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் சோபனா(30). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சண்முகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நல்லமுறையில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சண்முகநாதன் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த சோபனா கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் வெற்றிசெல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எடமலைப்பட்டிபுதூர் பகுதி செயலாளர் வேலுசாமி மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவு கன்டோன்மென்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சோபனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: