ராகு கேது பெயர்ச்சி

பட்டிவீரன்பட்டி, பிப். 14 பட்டிவீரன்பட்டியில் உள்ள சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வேள்வி பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் யாகசாலையில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. விழாவில் ராகு மற்றும் கேது பகவானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர் போன்ற பூஜை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை நடைபெற்றது.
Advertising
Advertising

தொடர்ந்து நவகிரகங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ராகு கேது பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Related Stories: