குடிமனை பட்டா கேட்டு பூதலூரில் 19ம் தேதி மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

திருக்காட்டுப்பள்ளி, பிப். 14: குடிமனை பட்டா வழங்ககோரி பூதலூரில் வரும் 19ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.மாவட்ட நிர்வாகம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 150 நாள் வேலையை உடனடியாக அனைத்து ஊராட்சிகளிலும் அனைவருக்கும் வழங்க வேண்டும். வேலைக்கான சட்ட கூலி ரூ.224ஐ முழுமையாக வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட இடம் அளித்தவர்களுக்கு உடனடியாக குடிமனை வழங்க வேண்டும். குடிசை வீட்டில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு பூதலூர் நான்குரோட்டில் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையில் சாலை மறியல் செய்யப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: