முஷ்ணம், பிப். 14: முஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் உள்ள பழைய மருத்துவமனை தெரு, கசப்பை மற்றும் கொம்பாடித் தெரு பகுதியில் தார் சாலை அமைக்க தமிழ்நாடு நகர்புற சாலை திட்டப்பணியின் கீழ் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் அந்த சாலை தரமற்று ஜல்லிகள் பெயர்ந்து குவியல் குவியலாக சிதறி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிதறி கிடக்கும் ஜல்லியில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வந்தனர்.இதனால் இச்சாலைமேல் முறையாக தார் ஊற்றி ரோடுரோலர் வாகனம் மிதித்தால் தான் சாலை முழுமையாக இருக்கும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தும் சீரமைக்கவில்லை.