பசுந்தீவனம் குறைந்ததால் ஓட்ஸ் உற்பத்தி அதிகரிப்பு

ஊட்டி, பிப். 13: நீலகிரி  மாவட்டத்தில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டதால், பெரும்பாலான செடி கொடிகள் பழுப்பு நிறத்திலேயே காட்சியளிக்கிறது. இது போன்ற சமயங்களில்  கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காமல், பால் உற்பத்தி குறைந்து  காணப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க  கால்நடைகளுக்கு  தேவையான உணவு நாள் தோறும் வழங்குவதற்காக ஒரு சிலர் மட்டுமே ஓட்ஸ் பயிரிட்டு வந்தனர். ஆனால், தற்போது பெரும்பாலான  விவசாயிகள் இந்த ஓட்ஸ் பயிர்களை தங்களது விவசாய நிலங்களில் பயிரிட்டு  வருகின்றனர். ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளி, பாலாடா போன்ற பகுதிகளில்  உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் இந்த ஓட்ஸ் பயிர்களை அதிகளவு பயிரிட்டு  வருகின்றனர்.

Related Stories: