ஓட்டு இயந்திரத்தை நம்பலாமா? விளக்கம் தருகிறது முகாம்

திண்டுக்கல், பிப்.13: வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம் அமைத்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு அரங்கம் திறந்துவைக்கப்பட்டது. கலெக்டர் வினய் துவக்கி வைத்தார். வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி இணைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இதன் செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மை குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில்நிலையங்கள், திருவிழாக்கள் போன்ற இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்ட செயல்முறை விளக்கத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்தனர்.தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கோட்டாட்சியர் ஜீவா, தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணிய பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: